சென்னை : அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை சரிந்து வருகிறது. நேற்றைய முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையானது.அதே போல் நேற்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,896-க்கு விற்பனையாயானது. இந்நிலையில், நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.25 குறைந்து 4,837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 200 குறைந்து 38,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி 68.80 ரூபாய்க்கு விற்பனை... விரிவாக படிக்க >>