Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

உற்சாகமாக கை குலுக்கிய மாணவிகள்! கெஜ்ரிவாலை சந்தித்த ஸ்டாலின்! பள்ளிகளில் விசிட்! ஏன் தெரியுமா?

Image
உற்சாகமாக கை குலுக்கிய மாணவிகள்! கெஜ்ரிவாலை சந்தித்த ஸ்டாலின்! பள்ளிகளில் விசிட்! ஏன் தெரியுமா? இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அரசுப்பள்ளி, இலவச கிளினிக் திட்டதை கெஜ்ரிவாலுடன் சேர்ந்து இருவரும் பார்வையிட்டனர். மேற்கு வினோத் நகரில் இருக்கும் ராஜ்கிய சர்வோதய கன்யா வித்யாலயாவில் முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவால் இருவரும் பார்வையிட்டனர். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இந்த சந்திப்பில் உடன் இருந்தார். இந்த நிலையில் டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க இருக்கிறார். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார்.. மேலும் ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார்.