கஞ்சா கடத்தல்காரர்களோடு பிரியாணி விருந்து! - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர்
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி, நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் ( 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தலா 2 கிலோ வீதம் 200 பண்டல்களில் 400 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.
Comments
Post a Comment