Posts

Showing posts with the label # | #Deg | #A | #Macr

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா567148946

Image
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதியும் இருக்கிறது. இந்த நிலையில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 3 மாணவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரியின் வகுப்பறைகள், விடுதி அறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இன்று கிருமினிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள