Posts

Showing posts with the label #People | #Killed | #Overturned | #Valley

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழப்பு!596235877

Image
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழப்பு! சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள ஷென்ஷரிலிருந்து 40 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சைன்ஜ் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதனிடையே ஜங்லா அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து குலு மாவட்ட துணை காவல் ஆணையர் அசுதோஷ் கர்க் கூறுகையில், இந்த விபத்து காலை 8:30 மணிக்கு நடந்துள்ளது. இதுகுறித்து ஜங்கலா கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்" என்றார். சைன்ஜ் பள்ளத்தாக்கு இமயமலை மலைகளால் சூழப்பட்டுள்ளது. கிரேட் இமாலயன் தேசிய பூங்கா எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பாதைகள் மிகவும் குறுகலாகவும், ஆபத்தானதானதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.