தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!?402593379
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!? நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, டெல்லி போன்ற தலைநகரங்களில் கொரோனா மீண்டும் வேகம் எடுப்பது, பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் வாயிலாக அறிவுறுத்தினார். தமிழகத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 95, திருவள்ளூரில் 33, காஞ்சிபுரத்தில் 30, செங்கல்பட்டில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா கட்டுப்பா...