வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்730179904
வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையான சோதனை நடத்தி, வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் எஸ்ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வருமான வரித் துறையின் விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.