நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு  neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. மே 15 ஆம் தேதியான நேற்றுடன் காலவகாசம் முடிவடைய இருந்த நிலையில், இந்த காலவகாசத்தை நீடிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  மேலும் படிக்க| அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இதனை ஏற்றுக் கொண்ட தேசிய தேர்வு முகமை மே 20 ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. மே 29 இரவு 9 மணி வரை மட்டுமே விண்ணபங்களை சமர்பிக்க முடியும். இரவு 11.50 மணிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை மட்டும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஆண்டு வரை, நீட் தேர்வில்...