137 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – மங்களூரில் பரபரப்பு புட் பாய்சனிங் காரணமாக 137 செவிலியர் மற்றும் மருத்துவ துணை படிப்புகள் படிக்கும் மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 137 செவிலியர் மற்றும் மருத்துவ துணை படிப்புகள் படிக்கும் மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு உணவு நஞ்சானதுதான் காரணமாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மங்களூர் சக்தி நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். மாணவர்கள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும் இரவில் அழைத்துச்செல்லப்பட்டனர். நகரில் குறைந்தபட்சம் 5 மருத்துவமனைகளில் இந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நகரின் போலீஸ் கமிஷ்னர் தெரிவித்தார். மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நேற்று அதிகாலை 2 மணி முதலே ஏற்பட்டது. ஆனால் அந்த கல்லூரி நிர்வாகம் பெற்றோர்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. பெற்றோர் நிலையில் தீவிரத்தை உணர்ந்தபோது, அவர்களை பீத...