137 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – மங்களூரில் பரபரப்பு
137 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – மங்களூரில் பரபரப்பு
புட் பாய்சனிங் காரணமாக 137 செவிலியர் மற்றும் மருத்துவ துணை படிப்புகள் படிக்கும் மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
137 செவிலியர் மற்றும் மருத்துவ துணை படிப்புகள் படிக்கும் மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு உணவு நஞ்சானதுதான் காரணமாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மங்களூர் சக்தி நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.
மாணவர்கள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும் இரவில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
நகரில் குறைந்தபட்சம் 5 மருத்துவமனைகளில் இந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நகரின் போலீஸ் கமிஷ்னர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நேற்று அதிகாலை 2 மணி முதலே ஏற்பட்டது. ஆனால் அந்த கல்லூரி நிர்வாகம் பெற்றோர்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. பெற்றோர் நிலையில் தீவிரத்தை உணர்ந்தபோது, அவர்களை பீதியடையச் செய்தது.
மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே உறவினர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த புட் பாய்சனிங்கிற்கு தண்ணீர் மாசு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று அதிகாலை இரண்டு மணி முதல் மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நிர்வாகத்திடம் கூறி வந்தாலும், அவர்ளை இரவு 9 மணிக்குப்பின்னர் தான் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சில மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏஜே மருத்துவமனையில் 52 மாணவர்களும், முல்லர் மருத்துவமனையில் 42 மாணவர்களும், கேஎம்சியில் 18 மாணவர்களும், யூனிட்டி மருத்துவமனையில் 14 மாணவர்களும், சிட்டி மருத்துவமனையில் 8 மாணவர்களும், 3 மாணவர்கள் மங்களா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு மாணவர்களின் உடல் நிலை குறித்த முழுவிவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நான் இரண்டு மருத்துவமனைகளில் சென்று மாணவர்களை பார்த்தேன். அவர்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார்கள். அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சோர்வடைந்திருக்கலாம் என்று கருதுகிறேன். அதிகாலை முதலே சம்பவம் நடந்திருந்தாலும், போலீசாருக்கு மாலையில்தான் தகவல் தெரியவந்தது“ என்று போலீஸ் கமிஷ்னர் கூறுகிறார்.
Comments
Post a Comment