நிர்வாணமாக போட்டோ எடுத்து விற்றார்".. கண்ணீர் வடிக்கும் 'கம்பீரம்' பட நடிகை - 2ஆம் திருமணமும் முறிந்த சோகம்1695331206
நிர்வாணமாக போட்டோ எடுத்து விற்றார்".. கண்ணீர் வடிக்கும் 'கம்பீரம்' பட நடிகை - 2ஆம் திருமணமும் முறிந்த சோகம்
தமிழில் வெளியான கம்பீரம் படத்தில் நடித்தவர் நடிகை ராக்கி சாவந்த்... சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களிலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் இவர்...
டிவி நிகழ்ச்சி, கவர்ச்சி நடனம் என திரையுலகில் நன்கு அறிமுகமானவர் தான் இவர்.. இந்தியில் வெளியான பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் சர்ச்சைகளின் ராணி என்ற அடையாளம் தான் ராக்கி சாவந்துக்கு...
கடந்த 2017ல் வால்மிகி முனிவர் குறித்து சர்ச்சை பேச்சால் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார் ராக்கி சாவந்த். இணையத்தில் பல்வேறு அவதூறு கருத்துகளை கூறி வருவது, மதம் சார்ந்த பேச்சுகளால் சர்ச்சை என அந்த வளையத்திற்குள்ளேயே இருந்தார் அவர்...
இந்த நிலையில் 2019ல் ரித்தேஷ் என்பவருடன் ராக்கி சாவந்துக்கு திருமணம் நடந்தது. ஆனால் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடால் தன் கணவரை பிரிந்தார் ராக்கி...
அதன்பிறகு அதில் கான் துரானி என்பவருடன் காதலில் இருந்தார் ராக்கி சாவந்த். இந்த சூழலில் திடீரென அவரை திருமணம் செய்து கொண்டதாக மாலையும் கழுத்துமாக போட்டோ ஒன்றை வெளியிட்டார்.
அதுவும் 9 மாதங்களுக்கு முன்பாகவே எங்கள் திருமணம் நடந்து விட்டது என்றும் கூறியிருந்தார் ராக்கி சாவந்த்..
திடீரென தன் 2வது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என காயங்களை காட்டியபடி கண்ணீர் கம்பலையுமாக மீடியாக்களின் முன்பாக வந்து நின்றார் அவர்...
திருமணம் ஆனது முதலே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதோடு , தன்னை நிர்வாண படமெடுத்து அதை இணையத்தில் விற்று பணம் சம்பாதித்தார் என ஷாக் கொடுத்தார்.
தன் கணவருக்கு வேறொரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார்களை முன்வைத்தார் ராக்கி...
தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்து எடுத்துக் கொண்டார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ராக்கி சாவந்த்.
இதன்பேரில் போலீசார் ராக்கியின் 2வது கணவரான அதில் கானை கைது செய்தனர்.
ராக்கி சாவந்தின் புகாரும், 2வது கணவர் கைதும் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...
Comments
Post a Comment