கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல் நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகத்தில் கருக்கலைப்பு மருந்து வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு அருகே இராமாபுரம் கிராமத்தில் உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ரம்யா (வயது 29) கர்ப்பமாக இருந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரம்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த செய்தியை அறிந்து, நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், அவரது இறப்பின் உண்மைக் காரணத்தை கண்டறிய உத்தரவிட்டிருந்தார். இதற்காக குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. விசாரணையில், உயிரிழந்த கர்ப்பிணி ரம்யா , மர...
Comments
Post a Comment