சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !! கொரோனாவின் தாயகமான சீனாவில் வைரஸின் தாக்கத்திலிருந்து பல உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த எச்3என்8 பறவைக்காய்ச்சல் சீனால் ஒரு சிறுவனுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002- ஆம் ஆண்டு பறவை காய்ச்சல் தொற்று வட அமெரிக்காவில் வாழும் நீர் பறவைகளில் முதல் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பறவைகள் குதிரைகள், நாய்கள் போன்றவற்றை பாதிப்பதாக அறியப்பட்ட போதும் மனிதர்களை பாதிக்கவில்லை. இந்நிலையில் சீனாவில் 4 வயதான சிறுவனுக்கு எச்3என்8 வைரஸ் இருப்பதை உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 5-ஆம் தேதி காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பரிசோசனை செய்ததில் எச்3என்8 என்ற பறவைக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வீட்டில் வளர்க்கப்பட்டு இருக்கும் கோழிகள் மூலம் சிறுவனுக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிறுவனின் உறவினர்களை பரிசோதனை செய்தபோது யாருக்கும் பா...
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல் நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகத்தில் கருக்கலைப்பு மருந்து வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு அருகே இராமாபுரம் கிராமத்தில் உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ரம்யா (வயது 29) கர்ப்பமாக இருந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரம்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த செய்தியை அறிந்து, நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், அவரது இறப்பின் உண்மைக் காரணத்தை கண்டறிய உத்தரவிட்டிருந்தார். இதற்காக குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. விசாரணையில், உயிரிழந்த கர்ப்பிணி ரம்யா , மர...
சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு சென்னை : சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ‘போஸ்ட் மேன்’ பணியை மட்டும் தான் செய்யச் சொல்கிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அவரது உரை பின்வருமாறு: நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். அவரைப் பாராட்டுவது என்பது ஒரு இயக்கத்தின் தலைவரை – ஒரு கருத்தியலின் தலைவரை பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகவே அவரை நான் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் பார்க்கிறேன். நினைத்துப் பார்க்கிறேன்,...
Comments
Post a Comment