பிரபல குணசித்திர நடிகர் திடீர் இறப்பு – கடும் வருத்தத்தில் திரையுலகம்!611494195


பிரபல குணசித்திர நடிகர் திடீர் இறப்பு – கடும் வருத்தத்தில் திரையுலகம்!


உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பிரபல மலையாள திரைப்பட நடிகர் சஜீத், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

நடிகர் சஜீத் உயிரிழப்பு:

மலையாள வட்டாரங்களில் வெப் தொடர்கள் மூலம் நடித்து சினிமா துறையில் நுழைந்தவர் தான் நடிகர் சஜீத். இவர் நடித்த வெப் தொடர்களுக்கு அடுத்தடுத்து கள, ஜானே மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் 52 வயதுடைய மலையாள பிரபல திரைப்பட நடிகர் சஜீத் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

 

இதனால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சிகிச்சை பலனின்றி சஜித் உயிரிழந்துள்ளார். மலையாள வட்டாரங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர்கள் இறப்பதால் மலையாள திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

Comments

Popular posts from this blog

Toasted Pecan Streusel Pumpkin Pie