வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு விடுமுறை!1465320904
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு விடுமுறை!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு விடுமுறை!
அடுத்து வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை
இந்த ஆண்டு துவங்கி இதுவரை சுமார் 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 7வது மாதத்தில் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் 10 நாட்கள் மீதம் இருப்பதால் அடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் அடுத்ததாக வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் மாதத்தில் தேசிய விடுமுறைகள் தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும். இது தவிர, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழா உள்ளிட்ட சில அரசு விடுமுறைகளும் உண்டு. இப்போது ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை பட்டியல் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 – துருபகா ஷீ-ஜி திருவிழா காரணமாக காங்டாக்கில் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஆகஸ்ட் 7 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
ஆகஸ்ட் 8 – முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 9 – முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் 11 – ரக்ஷா பந்தன் காரணமாக சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
ஆகஸ்ட் 13 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 14 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டை முன்னிட்டு மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஆகஸ்ட் 18 – ஜன்மாஷ்டமியைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 21 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
ஆகஸ்ட் 27 – நான்காவது சனிக்கிழமை.
ஆகஸ்ட் 28 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
ஆகஸ்ட் 29 – ஹர்தாலிகா தீஜ் அனுசரிக்கும் விதமாக சத்தீஸ்கர் மற்றும் சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 31, 2022 – குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கி விடுமுறை அளிக்கப்படுகிறது.
Comments
Post a Comment