ஜியோ தலைவரான மகன் ஆகாஷ் அம்பானி!562839365


ஜியோ தலைவரான மகன் ஆகாஷ் அம்பானி!


இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி ஜியோ இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். முகேஷ் அம்பானிக்கு பதிலாக அவரது மகன் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவனத் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று (ஜூன் 27) நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் கூட்டம் ஒன்றில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆகாஷ் அம்பானி தவிர அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரமீந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி.சௌத்ரி ஆகியோர் கூடுதல் இயக்குநர்களாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  நியமிக்கப்பட்டுள்ளனர்.

  1. ரிலையன்ஸ் குழுமத்தில் தலைமை  மாற்றத்தின் ஒரு பகுதியாக தனது பிள்ளைகள் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொள்வர்கள் என சென்ற 2021ஆம் ஆண்டு முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான தனது தந்தை திருபாய் அம்பானியின் அதே ஆற்றலையும் உத்வேகத்தையும் தனது குழந்தைகளிடம் காண முடியும் என முகேஷ் அம்பானி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog