Upcoming Bank Exams 2022: தேர்வர்கள் கவனம் செலுத்த வேண்டிய வங்கிப் பணிகள் இங்கே


Upcoming Bank Exams 2022: தேர்வர்கள் கவனம் செலுத்த வேண்டிய வங்கிப் பணிகள் இங்கே


வங்கிப் பணியிடங்கள்:  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொதுத் துறை வங்கியின் பங்களிப்பு அளவிட முடியாததாகும். ஒவ்வொரு ஆண்டும், வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (IBPS) வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது.

இத்தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.                  

RRBs – CRP RRB-XI (Office Assistants) and CRP RRB-XI (Officers) :  பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1  பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1  பதவிக்கான முதல்நிலை தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 07, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அலுவலர் நிலை 2 மற்றும் 3  பதவிகளுக்கான அடிப்படைத் தேர்வு செப்டம்பர் மாதம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது.

பிராந்திய மொழிகளில் தேர்வு: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தேர்வை கொங்கனி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று 2019-ம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. அப்போதிலிருந்து பிராந்திய மொழிகளிலும் மேற்கண்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு:  இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் தேர்வு (PSBs – CRP CLERK-XII) ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இப்பதவிக்கான, முதன்மைத்  தேர்வு அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிப் பணிகளில் தமிழ் கட்டாயம் இல்லை - 50% வெளிமாநிலத்தவர்கள் நியமனம்

பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம்: ஆங்கிலம், இந்தியுடன் நாட்டின் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசின் நிதி அமைச்சகம் முன்னதாக பரிந்துரைத்தது.

நாட்டின் மிகப்பெரிய பணிச் சேர்க்கையில் ஒன்றாக இந்த எழுத்தர் தேர்வு உள்ளது. கடந்தாண்டு, 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Exam

எஸ்பிஐ வங்கி: நாட்டின் மிகவும் பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கான விண்ணப்ப செயல்முறையை வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Comments

Popular posts from this blog