Simbu : சிலம்பரசனை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை…! வைரலாகும் புகைப்படம் …!
Simbu : சிலம்பரசனை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை…! வைரலாகும் புகைப்படம் …!
எனினும் சிம்புவுக்கு இப்போது திருமணம் நடக்கும், அப்போது திருமணம் நடக்கும் என்று அவரது ரசிகர்களும் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனால் அவரது திருமண வாழ்வு எப்போது துவங்கும் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவ்வப்போது சிம்புவின் திருமணம் குறித்து பரபரப்பான பேச்சுக்கள் எழுவதும், பின் அடங்கி போவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
Vijay: தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்..! வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..!
அந்த வகையில் தற்பொது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. தற்போது இதற்கு விதை போட்டிருப்பவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சிம்புவின் திருமணம் குறித்து இன்ஸ்டாவில் போட்ட பதிவு நெட்டிசன்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
சமீபத்தில் நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாவில் விழா ஒன்றில் உணர்ச்சிவசப்பட்டு சிம்பு கண்கலங்கும் ஸ்டில் அடங்கிய மீம் இமேஜ் ஒன்றை ஷேர் செய்து "எல்லோருக்கும் ஒரு நாள் திருமணம் நடந்திருக்கும். நானும், எஸ்டிஆர்-ம் மட்டுமே எஞ்சியிருப்போம்" என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். உடனே இதனை பார்த்த நெட்டிசன்கள் பேசாமல் நீங்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாமே என்று தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
என்னடா இது நமக்கு வந்த சோதனை. சிம்புவிடம் நம்மை கோர்த்து விடுகிறார்காளே என்றெண்ணி . "நல்லா தான் இருக்கும். ஆனா எனக்கு இப்போ ஆள் இருக்கே" என்று எமோஜியுடன் பதிவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி.
மாநாடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ள நடிகர் சிம்புவின் திருமண பேச்சுக்கள் மீண்டும் சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காகி வரும் நிலையில், தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment