IPL 2022: ‘அடேங்கப்பா’…23.2 ஓவர்கள் டாட் பால்: அசத்தும் புறக்கணிக்கப்பட்ட பௌலர்...தரமான ரெக்கார்ட்!
IPL 2022: ‘அடேங்கப்பா’…23.2 ஓவர்கள் டாட் பால்: அசத்தும் புறக்கணிக்கப்பட்ட பௌலர்...தரமான ரெக்கார்ட்!
எதிர்பார்க்காத ட்விஸ்ட்:
இந்த 15ஆவது சீசனில் பல எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் சமீப காலமாக இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட யுஜ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் போன்றவர்கள் அனைத்து போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தி வருகிறார்கள்.
உமேஷ் யாதவ்:
இந்திய டி20 அணியில் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் இந்த சீசனில் வேற லெவலில் பந்துவீசி வருகிறார். விக்கெட்களை வீழ்த்துவதைவிட, அதிக டாட் பால்களை வீசி பேட்ஸ்மேன்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அதுவும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பவுர் பிளே ஓவர்களில்தான் அதிகளவில் டாட் பால்களை வீசி அசத்தி வருகிறார்.
காரணம் என்ன?
மும்பை, புனே பிட்ச்களில் டெஸ்ட் மேட்ச் லெந்த் பால்களை எதிர்கொள்வது மிகவும் கடினம். இதனால்தான் முகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்ற டெஸ்ட் பௌலர்கள் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வருகிறார்கள். குறிப்பாக உமேஷ் யாதவ்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மெகா சாதனை:
இந்நிலையில் டாட் பால்களில் உமேஷ் மெகா சாதனையை படைத்துள்ளார். இந்த சீசனில் மட்டும் இதுவரை 140 பந்துகளை அதாவது 23.2 ஓவர்களை டாட் பாலாக வீசி, 15ஆவது சீசனில் அதிக டாட் பால்களை வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
வாய்ப்பு உறுதி?
இதனால், உமேஷ் யாதவ்விற்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு உறுதியாகவிட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் இனி ரெகுலராக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இப்போட்டி ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment