விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!


விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!


இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தளபதி 66 இல் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த இம் மாதம் 2 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.  அந்த சமயத்தில் விமான நிலையத்தில் நடிகர் விஜய் நடந்து செல்லும் வீடியோ சமூகத்தில் வைரலானது.

 

மேலும் படிக்க | மீண்டும் இணைகிறது ஜெய் பீம் கூட்டணி... இந்த முறை எந்த சம்பவம்?

இந்த நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் ஹைதராபாத்திலிருந்து இருந்து விமானம் மூலம் சற்று முன் சென்னை வந்தடைந்தார்.  இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்கில் வைரல் ஆகி வருகிறது.  சிறிது ஓய்விற்கு பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.  நேற்று தளபதி 66 படத்தில் கலந்து கொண்டதாக பிரகாஸ்ராஜ் விஜய்யுடன் தான் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.  இப்படத்தில் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.  அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படம் வெளிவர உள்ளது.

prakashraj

இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.  இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் விரைவில் தளபதி 67 குறித்த அறிவிப்பு வரும் என்று தெரிவித்து இருந்தார்.  இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.  

மேலும் படிக்க | வடக்கா தெற்கா - பேட்டியில் கமல் ஹாசன் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog