கெளதம் மேனன் பட நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்?- அதுவும் இப்படியான ரோலா?!


கெளதம் மேனன் பட நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்?- அதுவும் இப்படியான ரோலா?!


பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தனது மகளையும் சினிமாவில் களமிறக்கி உள்ளார். அந்த வகையில் அவரது மகள் அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார்.

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வருகிற  ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸ் ஆகவுள்ளது. 2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் இதைத் தயாரித்துவருகின்றனர்.

யுவன் இதற்கு இசையமைத்துவருகிறார். விருமனைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கவுள்ள கொரோனா குமார் எனும் படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளாராம் அதிதி.

சிம்பு நடிக்கவுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிதி பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்திலும் அதிதி இணையவுள்ளாராம்.

மேலும் படிக்க | பாப் கார்ன் மட்டுமில்ல; கொழுக்கட்டை சாப்பிட்டுக்கிட்டும் ‘விருமன்’ பாக்கலாம்!- ஏன்?

மலையாளத்தில் இயக்குநர் முகமது முஸ்தபா இயக்கத்தில் வெளியான கப்பேலா படத்தை கெளதம் மேனன் தமிழில் ரீமேக் செய்யவுள்ளாராம். அதில்தான் அதிதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

கப்பேலாவைப் பொறுத்தவரை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். எனவே இதில் அதிதிக்கு லீடிங் ரோல் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 2022 ஐபிஎல்: அடேங்கப்பா.. சிக்ஸரில் இப்படியொரு சாதனையா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Comments

Popular posts from this blog