தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்


சென்னை: தமிழகத்தில் ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மே-14-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினாத்தாள் திருத்தும் பனி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜூன் 4-வது பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog