அடேங்கப்பா...1200 கோடி வசூல்...புதிய மைல்கல்லை எட்டிய கேஜிஎஃப் 2


அடேங்கப்பா...1200 கோடி வசூல்...புதிய மைல்கல்லை எட்டிய கேஜிஎஃப் 2


கேஜிஎஃப் 2 படம் மிக குறுகிய நாட்களில் 1000 கோடி வசூலை கடந்து, இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் மே 16 ம் தேதி ஓடிடி.,யிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்கு மட்டும் தனி கட்டணத்தை ஓடிடி தளம் நிர்ணயித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். அமேசான் பிரைம் வீடியோவில் கேஜிஎஃப் 2 படம் பார்க்க ரூ.199 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் 3 படத்தை இயக்க உள்ளதாக பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் சில காட்சிகளை, கேஜிஎஃப் 2 எடுக்கும் போதே பிரசாந்த் நீல் எடுத்து முடித்து விட்டதாக யாஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். கேஜிஎஃப் 3 நிச்சயம் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என்றும், இந்த படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு துவங்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், எமோஷன், மாஸ் டயலாக் என அனைத்தும் கலந்த கலவையாக கேஜிஎஃப் 2 படம் அமைந்திருந்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகப் பெரிய ஆதரவும், எதிர்பார்ப்பும் ஏற்படுத்தி உள்ளது. முதல் பாகத்தில் ராக்கி பாயின் வளர்ச்சியை காட்டியவர்கள், இரண்டாம் பாகத்தில் டானாக இருந்த ராக்கி பாய் எப்படி மான்ஸ்டர் ஆனார் என காட்டியிருந்தனர். ஆனால் க்ளைமாக்சில் ராக்கி பாய் கடலில் மூழ்கியதாக காட்டப்படுவதால், அடுத்து என்ன நடக்கும், ராக்கி பாய் இறந்து விட்டாரா, கடலில் மூழ்கிய அவர் எப்படி தப்புவார், அவர் கொண்டு சென்ற தங்க குவியல் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விகளுக்கு கேஜிஎஃப் 3 படத்தில் விடை கிடைக்கும் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் உலக அளவில் 1200 கோடி வசூலை கடந்து, மற்றொரு புதிய சாதனையை படைத்துள்ளது. டங்கள், பாகுபலி 2 படங்களுக்கு பிறகு உலக அளவில் 1200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த மூன்றாவது இந்திய படம் என்ற பெருமையை கேஜிஎஃப் 2 பெற்றுள்ளது. ரிலீசாகி 34 நாட்களில் 1204.37 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது.

பாகுபலி 2 வசூலை மிஞ்சுமா

கேஜிஎஃப் 2 படம் முதல் வாரத்தில் 720.31 கோடிகளையும், இரண்டாவது வாரத்தில் 223.51 கோடிகளையும், மூன்றாவது வாரத்தில் 140.55 கோடிகளையும் , நான்காவது வாரத்தில் 91.26 கோடிகளையும் பெற்றுள்ளது. கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், வசூல் தொடர்ந்து வருவதால் அடுத்து எந்த படத்தின் சாதனையை இது முறியடிக்கும், பாகுபலி 2 படத்தின் வசூலை எட்டுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் ஒரு மாதத்தில் 1200 கோடி வசூல் என்றால், பாகுபலி 2 சாதனையான 1800 கோடியை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog