பதற்றம் வேண்டாம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நான்காவது அலை துவங்கிவிட்டதோ, மீண்டும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சம் நாட்டு மக்கள் மனதில் தோன்றியுள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவிலும், 2020 ஜனவரி இறுதியில் இந்தியாவிலும் கால்பதித்த இல்லையில்லை வேர்பதித்த கொரோனா வைரசை அடியோடு ஒழிக்க முடியாது என்ற உண்மை மனிதனுக்கு புரிய சிறிது கால தாமதம் ஆகிவிட்டது. கண்ணை கட்டி காட்டில் விட்டவர்கள் போல் இந்த வைரஸ் பற்றிய எந்த புரிதலுமின்றி, அதை சமாளிக்க வழி தெரியாமல் முதல் அலையில் மனித குலம் சிக்கி சீரழிந்தது. தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, உலகெங்கும் பல்வேறு நாட்டு அரசுகள் அறிவித்த தீவிர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் நாடுகளுக்கும் தனி மனிதனுக்கும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment