500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா?

500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா?
விக்ரம் படத்திற்காக இந்தியாவில் உள்ள பிரபல நகரங்கள் மட்டுமின்றி மலேசியா, துபாய் என வெளிநாடுகளிலும் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக காலில் சக்கரம் கட்டி சுழல்வது போல இந்த வயதிலும் சுழன்றபடி பல இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து அந்த மொழியிலேயே பேசி அனைவரது கவனத்தையும் விக்ரம் பக்கம் திருப்பி வருகிறார்.
ஹைதராபாத்தில் நடந்த விக்ரம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பான் இந்தியா படங்களை நிறைய கொடுத்துட்டோம். இனி பான் வேர்ல்டுக்கு யோசிங்க.. ரசிகர்களாக நீங்கள் கொடுக்கும் அழுத்தம் தான் எங்களைப் போன்ற திரைக் கலைஞர்களை அடுத்த இலக்கு நோக்கி ஓட வைக்கிறது என்று பேசினார். டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் டகுபதியும் உடனிருந்தார்.
பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விக்ரம் படத்தின் NFT வியாபாரத்தை விரிவுப்படுத்திய கமல், சமீபத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவுக்கும் சென்று விக்ரம் படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். புர்ஜ் கலிஃபாவில் இன்று விக்ரம் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய துபாய்க்கு சென்றுள்ள கமல் அங்கேயும் ரசிகர்களை சந்தித்து உரையாட போகிறார்.
500 திரையரங்குகள், 2000 ஸ்க்ரீன்கள் மற்றும் 4000 காட்சிகள் என அமெரிக்காவில் பெரியளவில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். ஜூன் 2ம் தேதியே அமெரிக்காவில் விக்ரம் படம் வெளியாகிறது. உலகநாயகன் எனும் பட்டத்தை சும்மா பயன்படுத்திக் கொள்ளாமல், உலகளவில் வசூல் வேட்டையை நிகழ்த்தி காட்டி விட வேண்டும் என தீர்மானித்து விட்டாரா கமல் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு பாராட்டி வருகின்றனர்.
ப்ரீ ரிலீஸ் பிசினஸிலேயே கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 200 கோடி வரை வியாபாரம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடித்துள்ள விக்ரம் திரைப்படம் 300 முதல் 400 கோடி வரை வசூல் வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மேல் வசூலித்தாலும், தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பெருமையாக விக்ரம் படம் மாறுவது கன்ஃபார்ம்.
Comments
Post a Comment