திருப்பத்தூர் புதூர்நாடு அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து -4 பேர் உயிரிழப்பு!


திருப்பத்தூர் புதூர்நாடு அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து -4 பேர் உயிரிழப்பு!


மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர். 10 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்    4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து நேர்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் இறந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog