சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!
சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !! கொரோனாவின் தாயகமான சீனாவில் வைரஸின் தாக்கத்திலிருந்து பல உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த எச்3என்8 பறவைக்காய்ச்சல் சீனால் ஒரு சிறுவனுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002- ஆம் ஆண்டு பறவை காய்ச்சல் தொற்று வட அமெரிக்காவில் வாழும் நீர் பறவைகளில் முதல் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பறவைகள் குதிரைகள், நாய்கள் போன்றவற்றை பாதிப்பதாக அறியப்பட்ட போதும் மனிதர்களை பாதிக்கவில்லை. இந்நிலையில் சீனாவில் 4 வயதான சிறுவனுக்கு எச்3என்8 வைரஸ் இருப்பதை உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 5-ஆம் தேதி காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பரிசோசனை செய்ததில் எச்3என்8 என்ற பறவைக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வீட்டில் வளர்க்கப்பட்டு இருக்கும் கோழிகள் மூலம் சிறுவனுக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிறுவனின் உறவினர்களை பரிசோதனை செய்தபோது யாருக்கும் பா...



Comments
Post a Comment