பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது... இன்றைய (மார்ச் 25-2022) நிலவரம்
137 நாட்களுக்கு பிறகு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில், ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 2 ரூபாய் 27 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 28 காசுகளும் உயர்ந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்வதால், எரிபொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment