ஷாருக்கான் கொடுத்த சர்ப்ரைஸ்! சென்னையில் 1 மாசம் ‘ஜவான்’ ஷூட்டிங்! ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குநர் அட்லி, அதன் பிறகு, தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் படமான ‘ஜவான்’ அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் படத்தில் யோகி பாபு மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மாஸ்டர், உபென்னா மற்றும் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். தற்போது சென்னையில் நடக்கவுள்ள ‘ஜவான்’ படத்த...